--- --:--:-- --

ஆந்திராவில் திடீரென அடுத்தடுத்து மயங்கி விழுந்த 200க்கும் மேற்பட்டோர்..! காரணம் என்ன?

8

ந்திராவில் ஈடூர் என்ற நகரில் மர்ம நோயால் இருநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரில் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென அடுத்தடுத்த மயக்கம் போட்டு விழுந்துள்ளனர்.

 

ஏலூரில் உள்ள தர்ஷினி வீதிக்கு வீதி, அசோக் நகர், அருந்ததி போன்ற இடங்களில் மக்கள் அடுத்தடுத்து தலை சுற்றிக் கீழே விழுந்தும் வாந்தி எடுப்பது போன்ற பிரச்சினைகளுடன் அரசு மருத்துவமனையில் வந்து சேர்ந்துள்ளனர்.

 

அங்கிருக்கும்படுக்கைகள் எல்லாம் நிரம்பியதால் வரண்டாவில் படுக்க வைக்கப்பட்டிருந்தனர். மருத்துவமனையில் சேர்ந்த நோயாளிகள் பலர் விந்தையான குரலில் கத்துவது, கவலையில் ஆழ்த்துகிறது.

 

சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டவர்களில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் வீடு திரும்பிய நிலையில் எஞ்சியவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெறுபவர்களின் 6 பேர் மேல் சிகிச்சைக்காக விஜயவாடாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏ இந்த விவகாரம் குறித்து மருத்துவ குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon