பல்கலைக்கழகப் பதிவாளர் கருணாமூர்த்தி நாளை நேரில் ஆஜராகிறார்..!
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் தொடர்பாக கலையரசன் விசாரணை குழு முன்பு பல்கலைக்கழகப் பதிவாளர் கருணாமூர்த்தி நாளை ஆஜராகிறார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்தது.
இதை தொடர்ந்து சூரப்பா மீதான புகார்கள் தொடர்பாக விசாரணை ஆணையம் தினசரி விசாரணை நடத்திவருகிறது. இந்நிலையில் விசாரணைக்கு தேவையான ஆவணங்களை அண்ணா பல்கலைக்கழகம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் உரிய நேரத்தில் ஒப்படைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி விசாரணைக்கு தேவையான ஆவணங்களுடன் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.
அதனடிப்படையில் பதிவாளர் கருணாமூர்த்தி நாளை விசாரணை ஆணையம் முன்பாக ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.







