புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்படுகிறது..!
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி வரும் பத்தாம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த தகவலை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடம் 93 ஆண்டுகள் பழமையானது என்பதாலும், தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை என்பதாலும் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்படுகிறது. தற்போதைய கட்டத்திலேயேஅருகிலேயே முக்கோண வடிவில் 862 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டும் ஒப்பந்தத்தை டாட்டா நிறுவனம் பெற்றுள்ளது.
அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடத்தில் எதிர்காலத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் அதற்கேற்ப கூடுதல் இருக்கைகளும் அமைக்கப்பட உள்ளது.






