தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் : 1366 பேருக்கு தொற்று உறுதி…! 1407 பேர் டிஸ்சார்ஜ்…! 15 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1366 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 1407 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த பல நாட்களாகவே கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று 1366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,88,920 ஆக அதிகரித்துள்ளது.மேலும் தமிழகத்தில் நேற்று போலவே இன்றும் 15 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,777 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்று 356 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 353 ஆக பதிவாகியாகியுள்ளது. இதனால்
சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,17, 204 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தொடர்ந்து 49-வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கு கீழ் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1,407 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனையடுத்து இதுவரை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,66,261 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 10,882 பேர் மட்டுமே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 70,881 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 1. 24 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.






