டெல்லியில் 9-வது நாளாக போராட்டம் – முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் 9-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். டெல்லியில் முகாமிட்டுள்ள பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகளை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது தொலைபேசி மூலம் விவசாயிகளை தொடர்பு கொண்ட மம்தா பானர்ஜி தனது முழு ஆதரவை தெரிவிப்பதாக கூறியுள்ளார். உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் ஆயிரக்கணக்கில் முகாமிட்டுள்ளனர். அங்கு கொரொனா பரவலை தடுக்க லாரி மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது தாமதம் செய்யும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து விளையாட்டு வீரர்கள் மற்றும் எழுத்தாளர்கள் விருதுகளை திரும்ப ஒப்படைத்து வருகின்றனர். எழுத்தாளர் தமக்கு கொடுக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை மத்திய அரசிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறினார்.






