புயல் தொடர்பாக மாநில தலைமைச் செயலர்களுடன் ஆலோசனை..!
வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ள நிலையில் தமிழ்நாடு, கேரள மாநில தலைமை செயலாளர்களோடு மத்திய அமைச்சரவை செயளர் ராஜீவ் கௌடா ஆலோசனை மேற்கொண்டார். பலத்த சூறைக்காற்று வீசும் நிலையில் டிசம்பர் 4ஆம் தேதி வரை மீன் பிடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
புயல் காரணமாக பயிர்களும், அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்படும் என்றும், தேவையான இடங்களில் தேசிய பேரிடர் மேலாண்மை படையினரை நிறுத்த வேண்டும் என்று ராஜீவ் கௌடா கேட்டுக் கொண்டார். இந்த ஆலோசனையில் லட்சத்தீவுகளின் அரசு ஆலோசகரும், கலந்து கொண்டார்.







