--- --:--:-- --

பப்பாளி மரத்திலிருந்து பப்பாளி பழத்தை சேதமடையாமல் பறிக்க விவசாயியின் ஐடியா..!

3

யரமான பப்பாளி மரத்திலிருந்து பப்பாளி பழத்தை சேதமடையாமல் பறிக்க விவசாயிகள் இந்த புதிய யுத்தி குறித்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பப்பாளி மரத்திலிருந்து பப்பாளிப் பழங்களை பறிக்கும் போது கீழே விழுந்து சேதம் அடைந்து விடும். இதனால் பப்பாளி விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு வந்தனர்.

 

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் உள்ள உயரமான பப்பாளி மரத்திலிருந்து பப்பாளி பழத்தை சேதமடையாமல் பறிக்க நவீன உத்தியை கையாண்டு உள்ளார்.

 

மூங்கில் குச்சியின் மேல்பாகத்தில் மூங்கிலை சிறிது தூரம் நான்காகப் பிளந்து மூங்கில் விரிந்திருக்கும் வகையில் அதன் நடுவில் கொட்டாங்குச்சியை வைத்து மூங்கில் கம்பு மூலம் பப்பாளி மரங்களில் பழுத்த பழங்களை எளிதாக கீழே விழாமல் பறித்தார்.

 

பப்பாளி பழத்தை பாதுகாப்பாக பறிக்கும் முறையை தனது மொபைல் போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு தற்போது இந்த வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவற்றில் வைரலாகி வருகிறது. பப்பாளிப்பழத்தை எளிதாகப் பறிக்கும் விவசாயியின் நவீன யுத்தி விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Right Menu Icon