--- --:--:-- --

திருவண்ணாமலையில் இன்று மாலை 4 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது..!

2

திருவண்ணாமலையில் இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படும் நிலையில் அதிகாலையிலேயே பரணி தீபம் ஏற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்றைக்கு கார்த்திகை மாதம் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

 

இதற்காக காலை நான்கு மணி அளவில் கீழே இருக்கக்கூடிய கோவிலில் பரணி தீபம் 4 மணி அளவில் ஏற்றப்பட்டுள்ளது. 2,668 அடி மலை உச்சியில் கிட்டத்தட்ட பெரிய கொப்பரையில் கிட்டத்தட்ட 1000 மீட்டர் காடா துணியில் திரி இருக்கும்.

 

பிரம்மாண்டமான அக்னி தலமாக பார்க்கக்கூடிய இந்த திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்து இருக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முதன்முறையாக வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon