சிவகங்கை மாவட்டத்தின் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு, பெயர் சேர்க்க, திருத்த இன்று முதல் வாய்ப்பு
சிவகங்கை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டார். அங்கீகாரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
வரைவு வாக்காளர் பட்டியலின்படி சிவகங்கை மாவட்ட ஒட்டு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 58ஆயிரத்து 73 பேர் இதில் ஆண்கள் 5,70,681 பேரும், பெண்கள் 5,87,330 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 62 பேரும், மொத்த வாக்குச்சாவடி எண்ணிக்கை 1348 ஆகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் டிசம்பர் 15 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் வசதிக்காக இம்மாதம் 21,22 தேதிகளிலும் டிசம்பர் 12,13ம் தேதிகளிலும் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் மீது ஜனவரி 5ல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பினால் 6A என்ற விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பாஸ்போர்ட் நகல் இணைத்து மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு தபாலில் அனுப்பலாம்.

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு விண்ணப்பிப்போர் முகவரி சான்றாக பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, குடிநீர், தொலைபேசி, மின் கட்டணம், கேஸ் இணைப்பு பில், வங்கி தபால் அலுவலக கணக்கு புத்தகம் ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







