--- --:--:-- --

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கன மழை நீடிக்கும்..!

7

மிழகத்தில் 12 மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மூன்று நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

 

கனமழை பொருத்தவரை சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon