வேலை இழப்பால் நூடுல்ஸ் கடை தொடங்கிய விமானி..!
மலேசியாவில் கொரொனா அச்சுறுத்தலால் வேலை இழந்த விமானி ஒருவர் நூடுல்ஸ் கடை ஒன்றை தொடங்கி பிரபலம் அடைந்துள்ளார். கொரொனா கட்டுப்பாடுகளால் விமான நிறுவனம் தனது 2000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது.
4 குழந்தைகளுக்கு தந்தையான விமானி முகமதுஎன்பவரும் இதில் வேலை இழந்த நிலையில் சற்றும் மனம் தளராமல் தலைநகர் கோலாலம்பூரில் சிறிய நூடுல்ஸ் கடை ஒன்றை தொடங்கியுள்ளார்.
விமான கேப்டனின் வெள்ளை சீருடையுடன் பணிக்கு வரும் அவர் இணையத்தில் வைரலான நிலையில் அவரின் நூடுல்ஸ் கடை சிறப்பு கவனம் பெற்றுள்ளது.






