--- --:--:-- --

கிராமசபை கூட்டங்கள் நடத்த கோரிய வழக்கில் ஜனவரி 22ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு..!

10.1

தமிழகத்தில் கிராமசபை கூட்டங்கள் நடத்த கோரி மக்கள் நீதி மைய நிர்வாகி தொடர்ந்த வழக்கில் ஜனவரி 22ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கொரொனா காரணமாக கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி நடக்கவிருந்த கிராமசபை கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர். இதனை எதிர்த்து மக்கள் நீதி மையத்தின் பொது செயலாளர் மவுரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 

அதில் கிராமங்களில் நிர்வாகம் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் கிராமசபை கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் எந்த முக்கிய காரணமும் இல்லாமல் கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்தது சட்டவிரோதமானது என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

ரத்து செய்யப்பட்ட கிராமசபை கூட்டங்கள் நடத்த கோரி ஊரக வளர்ச்சித் துறை இயக்குநருக்கு அனுப்பிய மனு குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் ஜனவரி 22ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

மேலும் இதே கோரிக்கையுடன் திமுக அமைப்புச் செயலாளர் கே என் நேரு தொடர்ந்த வழக்குடன் இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon