--- --:--:-- --

ஆன்லைன் சூதாட்ட கேம்களுக்கு தடை..! தமிழக அரசு முடிவு..!

10

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க அரசு முடிவு செய்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பொது முடக்கம் காரணமாக இணைய சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்தது. அந்த வகையில் இளைஞர்கள் ஏராளமானோர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதாக தகவல்கள் வெளியாகின.

 

இதில் மூழ்கும் இளைஞர்கள் பணத்தை இழந்து வருகின்றனர். மேலும் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதனால் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துவோர் அதில் ஈடுபடுவோரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon