சிசிடிவி கேமராவை கல்லால் அடித்து திருடி செல்லும் காட்சிகள்..!
சென்னை புளியந்தோப்பில் இளைஞர் ஒருவர் சிசிடிவி கேமராவை கல்லால் அடித்து திருடி செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. புளியந்தோப்பு சாஸ்திரி நகர் 22வது தெருவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இரண்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இந்நிலையில் ஒரு சிசிடிவி கேமரா திருடு போனதையடுத்து அதிர்ச்சியடைந்தனர் அப்பகுதி மக்கள். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து இளைஞர் ஒருவர் சிசிடிவி கேமராவை எடுத்துச் சென்றது தெரியவந்தது.







