--- --:--:-- --

தீபாவளி பண்டிகையன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி..!

7

தீபாவளி பண்டிகையன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து அமைச்சர் கருப்பணன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பொது மக்கள் பட்டாசுகளை வெடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழக அரசின் அறிவிப்புக்கு ஒத்துழைப்பு அளித்து பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று அமைச்சர் கே சி கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

 

காஞ்சிபுரத்தில் தீபாவளியை ஒட்டி பட்டாசு கடைகள் அமைக்க வழக்கத்தை விட குறைவான நபர்களை விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க 97 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு சுமார் 70க்கும் அதிகமானோர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விதிமுறைகளை பின்பற்றாமல் விண்ணப்பித்திருந்த 19 கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 51 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon