இரு சக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு..!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இரு சக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் தலைமை காவலர் உயிரிழந்துள்ளார். சிவகாசி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த மாரிகண்ணு என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதியுள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.







