பேக்கரியில் ஒட்டகப்பால் கேட்டு தகராறு செய்த கும்பல்..!
புதுச்சேரியில் ஒட்டகப்பால் கேட்டு பேக்கரியில் தகராறு செய்த மூன்று பேரை கண்காணிப்பு கேமரா காட்சி பதிவை கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் செல்வராஜ் என்பவர் நடத்தி வரும் பேக்கரிக்கு நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் ஒட்டகப்பால் வேண்டும் என்று கேட்டு தகராறு செய்துள்ளனர்.
மேலும் கல்லா பெட்டியில் உள்ள பணத்தை கேட்டு அங்கு அடுக்கி வைத்திருந்த பண்டங்களை கீழே எரிந்ததுடன் பெட்டியில் வைத்திருந்த பணத்தை எடுக்க முயன்றுள்ளனர். பேக்கரி ஊழியர்களும் ஒன்றுசேர்ந்து அவர்களை விரட்டியதையடுத்து 3 பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர்.







