ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேர் இடமாற்றம்: செய்தித்துறை இயக்குநராக பாஸ்கர பாண்டியன் நியமனம்!!
தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் செய்தித்துறை இயக்குநராக பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாறுதல் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஐஏஎஸ் அதிகாரியான ஹர் சஹாய் மீனா, வெளிநாட்டு பயிற்சி முடித்ததும், அரசுப் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருந்தங்கள் (பயிற்சி) துறை செயலாளராக நியமிக்கப்படுகிறார். மருத்துவ விடுப்பில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி பத்மஜா, பெரம்பலூர் துணை கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.
முதல்வரின் சிறப்பு குழுவின் சிறப்பு அதிகாரியாக இருந்த பாஸ்கர பாண்டியன் இடமாற்றம் செய்யப்பட்டு, தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் இயக்குனராகவும், தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையின் துணை செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார். இந்தத் துறையை பதிவுத்துறை ஐஜியான சங்கர் கூடுதலாக கவனித்து வந்தார் என்பது குறிப்பித்தக்கது.







