--- --:--:-- --

இரும்பு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை..!

13

சென்னையில் பட்டப்பகலில் இரும்பு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 50% சவரன் தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எம்கேபி நகரைச் சேர்ந்த ஜோசப் செல்வராஜ் வண்ணாரப்பேட்டையில் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.

 

நேற்று கடையில் இருந்தபோது எதிர்வீட்டுக்காரர் அளித்த தகவலின் பேரில் வீடு திரும்பியுள்ளார். வீட்டில் பீரோவில் இருந்த 50 சவரன் தங்கம் மற்றும் வைர கம்மல்கள் மாயமாகி இருந்ததை கண்டு பிடித்துள்ளார்.

 

புகாரின்பேரில் எம்கேபி நகர்காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். செல்வராஜின் எதிர் வீட்டை வெளிப்பக்கமாக தாழ்பாள் போட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

Leave a Reply

Right Menu Icon