6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை..!
அடுத்த 24 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த நிலையில் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 24 மணி நேரத்தில் ஈரோடு, கோவை, நீலகிரி,மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், கரூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி மாநிலத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 48 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.







