--- --:--:-- --

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : இன்று 2435 பேருக்கு தொற்று உறுதி ..! 31பேர் உயிரிழப்பு!!

15

மிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு மேலும் குறைந்து இன்று 2435 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று போலவே 31 ஆக பதிவாகியுள்ளது.தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

 

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நேற்று 2481 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று அந்த எண்ணிக்கை சற்று குறைந்து 2435 ஆக பதிவாகி உள்ளது. இதனால் இதுவரையிலான மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 31 ஆயிரத்து 942 ஆக உயர்ந்துள்ளது.

 

நேற்று போலவே இன்றும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 214 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 2707 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் இன்னும் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்து 201 ஆக குறைந்துள்ளது.

 

சென்னையிலும் தொடர்ந்து தினசரி தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று 669 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னையில் மட்டும் இதுவரையில் மொத்த தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து ஆயிரத்து 848 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 3677 ஆக உயர்ந்துள்ளது.

 

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக அதிக பாதிப்பு பதிவாகி வருகிறது. இன்றும் கோவையில் 238 , செங்கல்பட்டு 136, திருவள்ளுர் 113 என இந்த மாவட்டங்களில் நூறு எண்ணிக்கைக்கு மேல் பாதிப்பு பதிவாகியுள்ளது.

 

தமிழகத்தில் இன்று மட்டும் 70 ஆயிரத்து 398 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை 1.02 கோடியாக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon