--- --:--:-- --

பிக் பாஸில் வாங்கும் கோடிக்கணக்கான சம்பளத்தை மக்களுக்காகவே செலவிடுகிறேன்..!

1.1

ழகங்கள் உடன் கூட்டணி இல்லை என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் சென்னையில் நடைபெற்று வரும் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

 

நீதி மையத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சித் தலைவர் கமலஹாசன் தலைமையில் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுக்க உள்ள அனைத்து தொகுதிகளின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

 

முதல்கட்ட கூட்டத்தில் மக்களுடன் மட்டுமே கூட்டணி என கமல்ஹாசன் தெரிவித்த நிலையில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என கமல்ஹாசன் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் மாலை நடைபெற்ற கூட்டத்தில் கமல்ஹாசன் அதற்கு விளக்கமளித்தார்.

 

மேலும் மூன்றாவது அணி அமைப்பது குறித்து சில மாவட்டச் செயலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அதற்கான தகுதி தங்களுக்கு வந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் உள்ள எல்லா கிராமங்களிலும் மக்கள் நீதி மையத்தின் தேவை அதிகரித்திருப்பதால் மாவட்ட செயலாளர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

 

அதைப்போல தமிழகமும் மாற்றத்திற்கு தயாராகி விட்டதாக பதிவு செய்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கோடிக்கணக்கில் தான் சம்பளம் வாங்கினாலும் அதனை மக்களுக்காகவே செலவு செய்வதாகவும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் பேசியிருக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon