--- --:--:-- --

10ஆம் வகுப்பு பாடத்தில் இந்தியை திணிப்பதாக எழுந்த தவறான தகவல்..!

1

பத்தாம் வகுப்பு பாடத்தில் இந்தித் திணிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் ஐந்தாம் இயல் பிரிவில் திறனரியும் பிரிவு பகுதியில் குறுவினா பகுதியில் இந்தி கற்க விரும்பும் காரணம் என குறிப்பிட்டு அதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் சில புகைப்படங்கள் பரவின.

 

இதனால் பத்தாம் வகுப்பு பாடத்தில் இந்தி திணிப்பு என்று சர்ச்சை எழுந்த நிலையில் இந்தித் திணிப்பு என்பது தவறான தகவல் என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

 

அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ஐந்தாம் இயல் பகுதியில் திறனறியும் பகுதியில் குறுவினா ஒன்றில் தாய்மொழியும், ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மூன்றாவது மொழியை குறிப்பிட்டு காரணம் என்ன என்று கேள்வி மட்டுமே கேட்கப்பட்டதாக வும் மூன்றாவது மொழி எது என்பது மாணவர்களின் விருப்பம் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

 

பாடப்புத்தகத்தில் இந்தி மொழி பற்றிய எந்த குறிப்பும் இடம்பெறவில்லை என்றும் இந்தி திணிப்பு என்று வெளியான தகவல் தவறானது என்றும் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

 

பாடப்புத்தகங்களில் உள்ள வினாக்களுக்கு தனியார் பதிப்பகங்களின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் முறைகளில் யாரேனும் இந்தி மொழி தொடர்பாக விடைகளை எழுதி இருக்கலாம் என்றும் அதற்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon