--- --:--:-- --

தம்பிக்கு நடந்த திருமண ஏற்பாட்டில் உடன்பாடு இல்லாததால் அண்ணன் தற்கொலை..!

14

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தனது பேச்சை மீறி தம்பிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்ததால் விரக்தியில் ராணுவ வீரர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. ராணுவ வீரரான இசக்கிமுத்துவின் தம்பி சங்கர்ரமணிக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தது.

 

திருமணத்திற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையிலிருந்த அவர் திருமணத்திற்காக வந்தவர் வீட்டிற்கு செல்லாமல் விடுதியில் தங்கியிருந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் தனது பேச்சை மீறி திருமண ஏற்பாடுகள் நடப்பதால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மனைவியிடம் செல்போனில் கூறிவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

 

மூன்று பிள்ளைகளை பரிதவிக்க விட்டு சென்ற ராணுவ வீரரின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதது கலங்குகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon