சிறுமியை பேஸ்புக் காதலானோடு சேர்த்து வைத்த நபர் கைது..!
நாகர்கோவிலில் 17 வயது சிறுமியை அவரது பேஸ்புக் காதலனோடு சேர்த்து வைத்த நபர் கைது செய்யப்பட்டார். வடசேரியியை சேர்ந்த சிறுமி கடந்த 24 ஆம் தேதி மாயமானார்.
விசாரணையில் கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சிறுமியை இருசக்கர வாகனத்தில் திருச்சிக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது. பேஸ்புக்கில் மூழ்கி கிடந்த சிறுமிக்கு கடலூரை சேர்ந்த விஜய் என்பவர் பழக்கமாகி காதலனாக மாறியுள்ளார்.
அவர்களுடன் பேஸ்புக்கில் செல்வகுமார் இணைந்துள்ளார். சிறுமிக்கும், விஜய்க்கும் இடையே காதல் தூதுவனாக மாறிய செல்வகுமார் சம்பவத்தன்று சிறுமியை திருச்சிக்கு அழைத்துச் சென்று அங்கு ஏற்கனவே காத்திருந்த விஜயிடம் அவரை ஒப்படைத்திருக்கிறார் என போலீசார் கூறுகின்றனர்.
செல்வாகுமார் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் காதல்ஜோடி சென்னையில் இருப்பதாக தகவல் கிடைத்ததால் போலீசார் சென்னை விரைந்திருக்கிறார்கள்.






