மாமியாருக்கு கொரொனா தொற்று உறுதியானதால் அச்சத்தில் மருமகள் தற்கொலை..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மாமியாருக்கு கொரொனா தொற்று உறுதியானதால் தனக்கும் தொற்று வந்துவிடுமோ என்ற அச்சத்தில் கிராம நிர்வாக உதவியாளர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ஷகிலா என்பவர் கட்டனாசாட்டியபட்டி கிராம நிர்வாக உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அவரது மாமியார் ஷாஜிதா பேகத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரொனா உறுதியான நிலையில் அவரது கணவர் ஷாஜகானுக்கும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த சில நாட்களாக பயத்தில் இருந்த ஷகிலா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.







