--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா பாதிப்பு…33 பேர் உயிரிழப்பு!!

4

மிழகத்தில் இன்று 3057 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளான நிலையில், 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

தமிழகத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக தினமும் குறைந்து கொண்டே வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 3 ஆயிரத்து 250 ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழகத்தில் தினசரி உயிரிழப்பும் படிப்படியாக குறைந்தே வருகிறது. இன்று ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 10 ஆயிரத்து 858 ஆக உயர்ந்துள்ளது. தினசரி டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் பாதிப்பை விட அதிகமாகவே உள்ளது.

 

இன்று 4262 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். சென்னையில் ஒரு வாரமாக ஆயிரத்திற்கு கீழாக தினசரி பாதிப்பு பதிவாகி வருவதும் ஆறுதலான விஷயமாகும். இன்று சென்னையில் 844 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளானதாக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon