--- --:--:-- --

தேர்தல் முன்விரோதம் காரணமாக கடத்தி சென்ற திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மீட்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறவினர்கள் 3 பேர் தீக்குளிக்க முயற்சி..!

13

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூரை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சுனில் குமார் என்பதற்கும் தேர்தல் முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் லட்சுமணன் மகள் கீர்த்தனாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வரும் 26ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

 

இந்நிலையில் கடந்த 21-ம் தேதி சுனில்குமார் தனது உறவினர்கள் துணையுடன் கீர்த்தனாவை கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பெண்ணின் தந்தை லட்சுமணன் மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இடைக்காட்டூரர சேர்ந்த சுனில்குமார், தினேஷ்குமார், சிவகாமி, தவமணி, ராஜாமணி உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று இடைக்காட்டூரில் இந்த இரு குடும்பத்திற்கும் ஏற்பட்ட மோதலில் லட்சுமணன் மனைவி கலைச்செல்வி க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

 

இதனைத் தொடர்ந்து கடத்தி சென்ற தனது பெண்ணை மீட்டுத்தரக் கோரியும் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பெண்ணின் தந்தை லட்சுமணன், சகோதரி சினேகா, மாமன் இளையராஜா (மாற்றுத்திறனாளி) ஆகியோர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றனர். உடனடியாக அங்கிருந்த காவலர்கள் அவர்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மீட்கக்கோரி உறவினர்கள் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Right Menu Icon