--- --:--:-- --

திருவாடானை யூனியன் உட்பட்ட 47 பஞ்சாயத்து துணை தலைவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது..!

15

திருவாடானை ஊராட்சி ஒன்றிய ஊராட்சிகளின் துணைத்தலைவர்கள் கூட்டமைப்பின் கூட்டம் அதன் தலைவர் அஞ்சுகோட்டை கணேசன் தலைமை தாங்கினார். செயலாளர் அசரப் அலி முன்னிலை வகித்தார். பொருளாளர் சேகர் கூட்ட பொருள் பற்றி விவாதித்தார்.

 

கூட்டத்தில் முதல் கூட்ட பொருளாக திருவாடானை ஒன்றிய கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒவ்வொரு பஞ்சாயத்தில் நடக்கக்கூடிய அரசு நடவடிக்கை பற்றியும் தகவல் பற்றியும் துணை தலைவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் எனவும், துணைத்தலைவர்களுடைய கோரிக்கைகளையும் குறைகளையும் பொது மக்களின் குறைகளாக பரிசீலனை செய்து அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

 

இது குறித்து கூட்டமைபின் தலைவர் கணேசன் கூறுகையில் சமீபகாலமாக திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வீடியோ மேனேஜர் யாரும் எங்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை தற்போது கூட வீடியோ ஒரு வலைத்தளத்தில் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அதில் தலைவர் துணைத் தலைவர்கள் அதிகளவில் பில் போட்டு பணம் பஞ்சாயத்தில் எடுக்கப்படுகிறது அதை கண்காணிக்கவும் என்று போட்டுள்ளார் அப்படி எதுவும் துணைத்தலைவர்கள் யாருக்கும் தெரியாது இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களுக்கும் மக்களைச் சென்றடைய கூடிய விஷயங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்
இதில் கூட்டமைப்ப சட்ட ஆலோசகர் என் மங்கலம் காமராஜ் நன்றியுரை கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

 

Leave a Reply

Right Menu Icon