--- --:--:-- --

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி இன்று பரப்புரை

6

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திரமோடியும், காங்கிரஸ் சார்பில் அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இன்று பரப்புரையை தொடங்குகின்றனர்.

 

பிரதமர் நரேந்திர மோடி ரோகதாஷ் மாவட்டத்திலுள்ள தேகிரி சோனி, கயா மற்றும் பகல்பூர் ஆகிய மாவட்டங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார். நெகிரி மற்றும் பகல்பூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரும் ஒரே மேடையில் அமர்ந்து பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

 

கயாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஐக்கிய ஜனதா தளத்தில் மக்களவைத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் மேடையை பகிர்ந்து கொள்கிறார். இதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நவாடா மற்றும் பகல்பூரில் நடக்கும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.

 

காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ள மகா கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக லாலுவின் தேஜஸ்ரீ சிரியாவில் பொதுக் கூட்டத்தின் போது ராகுல் காந்தியுடன் இணைந்து பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

Leave a Reply

Right Menu Icon