--- --:--:-- --

யுவன் சங்கர் ராஜாவுக்கு அட்வைஸ் சொன்ன நடிகர் அஜீத்..!

3.1

திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட வேண்டாம் என நடிகர் அஜித் தனக்கு அறிவுரை கூறியதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இசையமைப்பாளராக மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக சினிமா தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜா ஈடுபட்டு வருகிறார்.

 

அவரது சில திரைப்படங்கள் சிக்கலை சந்தித்துள்ளன. இந்த நிலையில் தயாரிப்பு பணிகள் தொடங்குவதற்கு முன்பே அஜித் திரைத்துறையில் ஏமாற்றுபவர்கள் அதிகம் எனவும் அதனால் தயாரிப்பில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுரை கூறியதாக யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

 

யுவன் தற்போது அஜித்தின் வலிமை திரைப் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

 

Leave a Reply

Right Menu Icon