--- --:--:-- --

பதுக்கல் காரணமாக வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது..!

3.1

வெங்காயம் பதுக்கப்பட்டதால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் வெங்காயம் விலை உயர்வு தாய்மார்களை வேதனையில் ஆழ்த்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

அதிமுக அரசு கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு வெங்காயத்தை விற்போம் என்றாலும் அனைவருக்கும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே எனக் கூறிய ஸ்டாலின் அதிமுக அரசு ஆதரித்துள்ள வேளாண் சட்டங்கள் அமலானல் எவ்வளவு வேண்டுமானாலும் வெங்காயம் தேக்கி வைக்கலாம், விலையை ஏற்றலாம் என குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த அனுபவத்திற்குப் பிறகாவது வேளாண் சட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தக் கூடாது என்றும் வெங்காயத்தை முழுவீச்சில் அரசு கொள்முதல் செய்து நியாயமான விலைக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon