சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி பெண்களுக்கு பாலியல் தொல்லை..!
தங்களது நிர்வாகி பெயரை பயன்படுத்தி சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கணித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி என கூறிக்கொண்டு ஒருவர் நேரில் வரவேண்டும் என பாலியல் தொல்லை தருவதாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் துணை நடிகை ஒருவர் ஆன்லைன் மூலம் புகார் கொடுத்துள்ளார்.
போட்டோ, வீடியோ அனுப்புமாறு அந்த நபர் பேசிய ஆடியோ வெளியாகி யுள்ளது. அதேபோன்று சன் பிக்சர்ஸ் நிறுவனமும் தங்களது நிறுவனத்திற்கு அந்த நபர் கெட்டபெயர் ஏற்படுத்துவதாக ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளது. இரு புகார்கள் தொடர்பாகவும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






