--- --:--:-- --

அரசு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்..!

2

ரசு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளன. அம்பாசமுத்திரத்தை அடுத்த பிரம்ம தேசத்தைச் சேர்ந்த இசக்கியம்மாள் என்று அந்த பெண் கடந்த 7ஆம் தேதி தலைப் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார்.

 

அவருக்கு அறுவை சிகிச்சை செய்து இரண்டு பெண் மற்றும் 2 ஆண் என நான்கு குழந்தைகளை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். 4 குழந்தைகளும் எடை குறைவாக இருந்ததால் பிரத்யேக பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சேர்க்கப்பட்டு கவனமாக பராமரிக்கப்பட்டு வருகின்றனர். 4 குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon