--- --:--:-- --

விசைத்தறி உரிமையாளரை மிரட்டி ஆபாசமாக பெண்ணுடன் புகைப்படம் எடுத்து மிரட்டிய கும்பல்..!

7

திருப்பூரில் போர்வை ஆர்டர் செய்ய அழைத்த விசைத்தறி உரிமையாளர்களிடம் பணம் மற்றும் நகையை பறித்த பெண் உட்பட 5 பேரை காவல்துறை கைது செய்தனர். வெள்ளகோவிலை சேர்ந்த நாற்றயன் என்பவர் விசைத்தறி வைத்து போர்வை தயாரித்து வருகிறார்.

 

இவரை தொலைபேசியில் அழைத்த பெண் ஒருவர் அதிகளவில் போர்வை தேவைப்படுவதாகவும் நேரில் வந்து ஆர்டர் எடுக்குமாறும் தெரிவித்துள்ளார். அந்த பெண் கூறிய இடத்திற்கு சென்ற போது அங்கிருந்த கும்பல் விசைத்தறி உரிமையாளரின் ஆடைகளை களைந்து உள்ளனர்.

 

பெண்ணின் அருகே நிற்க வைத்து படமெடுத்ததுடன் அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதாக மிரட்டி 3 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளனர். இது குறித்து அவர்களிடம் தெரிவிக்க கூடாது என்று எச்சரித்து அந்த கும்பல் நாற்றயன் தங்க நகைகள், செல்போன் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து விடுகின்றனர்.

 

இது தொடர்பாக விசைத்தறி உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் பெண் மற்றும் அவருடன் சேர்ந்து பணம் மற்றும் நகைகளை பறித்த மேலும் 4 பேரை கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon