கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து கொன்ற கொடூரன்..!
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து கொன்ற கொடூரன் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொன்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
விஜயவாடா அருகே கிரிஸ்துராஜபுரம் பகுதியை சேர்ந்த திவ்யா என்ற இளம்பெண் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவன் திவ்யாவை கழுத்தை அறுத்து கொல்ல முயன்றுள்ளார்.
அலறல் சப்தம் கேட்டு மக்கள் வந்த நிலையில் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டுள்ளார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே திவ்யா உயிரிழந்தார். சிகிச்சை பெற்று வரும் சின்னசாமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.







