--- --:--:-- --

10 ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாதவர் 21 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றிய அதிர்ச்சி சம்பவம்..!

1

கிருஷ்ணகிரியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத நபர் அரசுப்பள்ளி ஆசிரியராக கடந்த 21 ஆண்டுகளாக பணியாற்றி வந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. காவிரி பட்டினத்தை அடுத்த கதிரி புரத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கடந்த 21 ஆண்டுகளாக அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

 

1999 ஆம் ஆண்டு சொக்கானகள்ளி என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து குறும்பெட்டி மற்றும் காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டலி புதூரில் உள்ள அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்போது வரை பணியாற்றி வருகிறார்.

 

இந்நிலையில் இவர் போலி சான்றிதழ் அளித்து பணி நியமனம் பெற்றதாகக் கூறி 2019ஆம் ஆண்டு குண்டலப்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர்முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்திருந்தார்.

 

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ராஜேந்திரன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை என்பதும் பணம் கொடுத்து போலி சான்றிதழ்களை பெற்று கடந்த 21 ஆண்டுகளாக அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றியதும் தெரியவந்துள்ளது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon