பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் தீண்டாமை வன்கொடுமைகளுக்கு ஆளாவது ஏன்..?
பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் அவமானப்படுத்தப்படுவதும், தீண்டாமை வன்கொடுமைகளுக்கு ஆளாவதும் தொடர்கதையாகி வரும் காட்டுமிராண்டித்தனம் ஏன் நீடித்து வருகிறது என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒடுக்கப்பட்டவர்கள் எந்த வழியாக முன் வரிசைக்கு வந்தாலும் சாதி வந்து வழி மறிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மாநில அளவிலான உயர்நிலை மற்றும் கண்காணிப்பு குழு தலைவராக தமிழக முதல்வர் இருக்கும் நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக இந்த கமிட்டி கூட்டம் நடக்கவில்லை என நீதிமன்றத்தில் அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதிகார வெறி அரசியலில் ஜாதிய கணக்குகள் மேலோங்கி நிற்பதை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருப்பதாகவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.







