அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு..!
வடக்கு உள் கர்நாடக நிலப்பரப்பில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு திருநெல்வேலி , கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் இந்தப் பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.







