காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண் எரித்துக் கொலை..!
ஆந்திராவில் காதலை ஏற்க மறுத்ததால் கொரொனா சிறப்புப் பிரிவு செவிலியர் பெட்ரோல் ஊற்றி எரித்து படுகொலை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. கிருஷ்ணா மாவட்டம் சித்தனபேட்டையை சேர்ந்த சின்னாரி என்ற இளம்பெண் விஜயவாடா கொரொனா சிறப்பு சிகிச்சை மையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
இவரை ஒருதலையாக காதலித்து வந்த விஜயவாடாவை சேர்ந்த நாகபூஷ்னம் என்பவர் தொடர்ந்து டார்ச்சர் செய்வதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக செவிலியர் அளித்த புகாரில் அண்மையில் நாகபூஷனத்தை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
இந்த நிலையில் கோவிட் சென்டருக்கு வந்த அந்த கொடூரன் திடீரென செவிலியர் சின்னாரி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் நிகழ்விடத்திலேயே செவிலி உயிரிழந்தார். அந்த கொடூரன் 80 சதவீத தீக்காயங்களுடன் விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






