அதிமுக முதல்வர் வேட்பாளரானதற்கு முதல்வரை சந்தித்து திரைப்பட நடிகர் சூரி வாழ்த்து..!
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அந்த கட்சியால் அறிவிக்கப்பட்டதை ஒட்டி அவரை சந்தித்து திரைப்பட நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அவர் பூங்கொத்து கொடுத்க்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
நிலம் வாங்கி தருவதாக கூறி திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் விஷாலின் தந்தை முன்னாள் டிஜிபி ரமேஷ் ஆகியோர் 2.69 கோடி ரூபாயை ஏமாற்றி விட்டதாக சில தினங்களுக்கு முன்னர் சூரி போலீசில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







