பட்டியலின வகுப்பை சேர்ந்தவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக குற்றச்சாட்டு..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓலைக்குளம் கிராமத்தில் ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் பட்டியலின வகுப்பை சேர்ந்த பால்ராஜ் என்பவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த சிவசங்கர், பெரிய மாரி, மகேந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.







