--- --:--:-- --

அதிமுகவில் அடுத்து ஒரு குண்டு! பேனரால் ஏற்பட்ட பெரும் சர்ச்சை!!

99718f2d-1075-4c49-8628-0610262f0ea8

துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என அச்சடிக்கப்பட்ட பேனர்.! அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பங்கேற்ற கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை! மதுரை திருப்பரங்குன்றத்தில் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கலந்து கொண்ட கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனர் ஒன்றில், முதல்வர் மற்றும் துணை முதல்வரின் பெயர்கள் மாற்றி வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பரங்குன்றம் ஒன்றிய அதிமுக சார்பில் நேற்று உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாவதற்கான நிர்வாகிகள் கூட்டம் நிலையூர் கைத்தறி நகரில் நேற்று நடைபெற்றது. இதற்காக அங்கு வைக்கப்பட்ட பேனர் ஒன்றில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்த பேனரை செய்தியாளர்கள் படம் பிடித்ததை தொடர்ந்து, காகிதத்தை பேனரில் ஒட்டி, அதிமுகவினர் மறைத்தனர்.

 

இது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவி பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே, தேனியில் உள்ள கோயில் ஒன்றில் துணை முதல்வர் ஓபிஎஸ்-ன் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டில், ரவீந்திரநாத் எம்.பி என அச்சடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon