பிறந்த 24 மணி நேரத்திலேயே வங்கி கணக்கு !
பிறந்த 24 மணி நேரத்திலேயே ஒரு குழந்தையின் பெயரில் வங்கி கணக்கை தொடங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது . பிறந்த 24 மணி நேரமே ஆன பச்சிளங் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கை தொடங்கும் திட்டத்தை வங்கிகள் அறிமுகம் செய்து இருக்கிறது. பெற்றோர்களின் அடையாள அட்டையை சமர்ப்பித்து குழந்தைகளின் புகைப்படம், பிறப்புச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பித்து பெற்றோர்களின் கையெழுத்துடன் குழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்கலாம்.
தொடங்கிய அடுத்த நிமிடமே குழந்தையின் பெயரில் ஏ.டி. எம். அட்டை, காசோலை , இணைய வங்கி சேவை போன்றவை கிடைத்துவிடும்.பொதுவாக சிறுவர்களுக்கான வங்கி கணக்குகளுக்கு அதிகமான வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.சில வங்கிகள் பெற்றோருடன் கூட்டு வங்கி கணக்கை தொடங்க அனுமதிக்கின்றன.அதே போல் ஜூனியர் கணக்குகளில் குறைந்தபட்ச கையிருப்பு மிகக்குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்விக்கான காப்பீடு நிலையான வைப்பீடு மற்றும் அதிகமான வட்டி விகிதம் போன்ற பல சிறப்பு அம்சங்கள் குழந்தைகளுக்கான வங்கி கணக்கில் இருக்கின்றன.குழந்தைகளுக்கான வங்கி கணக்கில் கூடுதல் சிறப்பம்சமாக கல்வி காப்பீடு வசதி வழங்குகின்றன .குழந்தைகள் வளர்ந்து 10 வயது எட்டிய பிறகு அவர்களே வங்கி கணக்கை இயக்க அனுமதிக்கின்றன. மேலும் 18 வயது நிரம்பிய பிறகு ஜூனியர் வங்கி கணக்கு வழக்கமான சேமிப்பு கணக்காக மாற்றப்படும். இக்கணக்கை இயக்குகின்ற உரிமை காப்ப்பாளர்களுக்கு மறுக்கப்படும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




