--- --:--:-- --

நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி..!

9

நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளர் உள்ளிட்ட இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு வீர தீர சூரன் என்ற திரைப்படத்தை அன்பு என்பவர் இந்த படத்தை தயாரிப்பதாக முடிவாகியுள்ளது.

 

நடிகர் விஷ்ணு விஷால் தான் அதன் கதாநாயகனாக நடிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டு அதில் நகைச்சுவை நடிகராக சூரி தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் அந்த படம் படப்பிடிப்பு முழுவதும் நடத்தப்படாமல் இருந்தது.

 

ஆனால் அந்த படத்தில் அவர் நடித்தது வரை அவருக்கு 40 லட்ச ரூபாய் சம்பள பாக்கி இருந்துள்ளது. அந்த சம்பளத்தை தருவதில் ஒரு மாற்று யோசனையாக சென்னை அடுத்த புதுச்சேரி அருகே இருக்கக்கூடிய நிலம் ஒன்று இருப்பதாகவும் அந்த நிலத்தை மேலும் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் இந்த சம்பள பாக்கி பணத்தை எடுத்து அந்த இடத்தை கிரையம் செய்து விடுவதாகவும் கூறியதால் இவர் அதற்கு சரி என்று கூறி பணத்தை 2 கோடி ரூபாய் பணத்தை கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

 

நிலத்தையும் கொடுக்காமல் சம்பள பாக்கியை சேர்த்து வாங்கிக் கொண்ட பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றியதாக நடிகர் சூரியை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon