சாமியார் ஜீவசமாதி அடைந்ததாக பரவிய தகவல்..!
கோயம்புத்தூர் அருகே சாமியார் ஜீவசமாதி அடைந்ததாக பரவிய தகவலால் பொதுமக்கள் திரண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 90 வயது சிவனடியாரான ராமசாமி என்பவன் வாழ்ந்து வந்தான்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நேரிட்ட விபத்து ஒன்றில் சிவனடியாரான பெரியவர் காயமடைந்த நிலையில் 15 நாட்களுக்குப் பின்னர் அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் ஜீவசமாதி அடைந்து விட்டதாக பரவிய தகவலால் சிவனடியார் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு பொதுமக்கள் சிவபக்தர்கள் படையெடுத்து வருவது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.







