--- --:--:-- --

ஈரோட்டில் நூலிழையில் உயிர் தப்பிய நபர்..!

8

ரோடு மாவட்டம் அந்தியூரில் நிதி நிறுவன உரிமையாளர் சாலை விபத்தில் சிக்கிய நிலையில் உயிர் தப்பிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

சோமசுந்தரம் அண்ணாமலை பகுதியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். பேருந்து நிலையம் அருகே சாலையோரம் சென்ற முதியவர் மீது மோதாமல் இருக்க இரு சக்கர வாகனத்தை இலேசாக திருப்பிய போது தடுமாறி கீழே விழுந்தார்.

 

அப்போது அவரை பக்கவாட்டில் கடந்து சென்ற சரக்கு லாரியின் சக்கரத்தில் சிக்காமல் நூலிழையில் அவர் உயிர் தப்பினார். இந்த விபத்தில் இடுப்பு மற்றும் கால் எலும்புகள் முறிந்த நிலையில் சோமசுந்தரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon