--- --:--:-- --

இரவு முழுவதும் ஆற்றில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நபர்..!

7

புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட வாலிபர் வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் வெட்டி வீசப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அய்யன்குட்டிபாளையத்தை சேர்ந்தவர் அரவிந்த் 25 வயதாகும் இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.

 

இது தொடர்பாக வானூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை புதுச்சேரி அருகிலுள்ள வில்லியனூர் ஆறு வழியாக சென்ற பொதுமக்கள் ஆற்று புதருக்குள் வெட்டு காயங்களுடன் போராடிக்கொண்டிருந்த அரவிந்தை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

 

உடனே அங்கு விரைந்து வந்த வில்லியனூர் போலீசார் மருத்துவர்கள் உதவியுடன் அரவிந்த்தை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து உள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

அந்த விசாரணையில் அரவிண்ட ரவுடி கொக்கு கார்த்திக் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்துள்ளார். அதன் காரணமாகவே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அரவிந்தை கடத்தி சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

 

7 மர்ம நபர்கள் நேற்று இரவு அரவிந்தை வெட்டி ஆற்றில் வீசியுள்ளனர் . வெட்டு காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் இரவு முழுவதும் துடிதுடித்தபடி ஆற்றில் கிடந்த அவர் காலையில் தான் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon