--- --:--:-- --

2 கிலோ 861 கிராம் எடையில் செய்யப்பட்டுள்ள ஒட்டியாணம்..!

6

புதுக்கோட்டை கீழ ராஜவீதியில் செயல்படும் தனியார் நகை கடை 2 கிலோ 861 கிராம் எடையில் தங்க ஒட்டியாணம் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

 

நகைக்கடையை நாற்பதாம் ஆண்டு விழாவையொட்டி 10 அடி நீளம், 7 இன்ச் அகலத்தில் 2 கிலோ 861 கிராம் எடையில் காமாட்சியம்மன், அஷ்டலட்சுமி உருவங்களுடன் தத்ரூபமாக தயாரான ஒட்டியாணம் எலைட் வேர்ல்டு ரெக்கார்ட்சில் இடம்பெற்றுள்ளது.

 

இதற்கான சான்றிதழை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட் ஏசியா பசிபிக் அம்பாசிடர் கார்த்திகேயன் வழங்கினார்.

Leave a Reply

Right Menu Icon