--- --:--:-- --

சடலத்தை கடித்த எலி..! மருத்துவமனையின் அலட்சியத்தில் நேர்ந்த சம்பவம்..!

10

ல்லக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த உடலை எலி கடித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புது வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஆவியூர் ஆறுமுகம் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

 

உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவ மனையில் வைத்திருந்த சடலத்தை எலி கடித்த தகவலறிந்து ஆறுமுகத்தின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

 

நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த மருத்துவமனை நிர்வாகம் குளிர்சாதன பெட்டியில் நடந்த கோளாறால் இந்த தவறு நிகழ்ந்து விட்டதாக தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது என்றும் மருத்துவமனை நிர்வாகம் உறுதி அளித்தது.

Leave a Reply

Right Menu Icon